search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரிவாயு தகனமேடை"

    • எரிவாயு தகன மேடை ரூ.8 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது.
    • இதனால் இறந்தவர்களின் சடலங்கள் தகரகொட்டகையில் வைத்து எரியூட்டப்படுகிறது.

    சீர்காழி:

    சீர்காழி ஈசானியத்தெரு வில் குப்பை கிடங்கு அருகில் நகராட்சிக்கு சொந்தமான நவீன எரிவாயு தகனமேடை உள்ளது.

    சீர்காழி நகரில் இறக்கும் நபர்களின் சடலங்கள் இங்கு கொண்டுவரப்பட்டு சம்பிரதாய முறைப்படி இயந்திரம் மூலம் எரியூட்டப்படுவது வழக்கம்.

    இதனிடையே பராமரிப்பு பணிக்காக எரிவாயு தகனமேடை இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டு, எரிவாயு தகன மேடை ரூ. 8 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.

    இந்நிலையில் தகனமே டை எந்திரம் மீண்டும் பழுதாகிவிட்டது.

    இதனால் எரிவாயு தகனமேடைக்கு வரும் இறந்தவர்களின் சடலங்கள் வெளிப்புறத்தில் தகரகொட்டகையில் வைத்து எரியூட்டப்படுகிறது.

    இதனால் புகை மூட்டம் அதிகமாகி அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    ஆகையால் நகராட்சி நிர்வாகம் நவீன எரிவாயு தகனமேடை இயந்திர பழுதினை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
    • ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மானாமதுரை நகராட்சி பகுதியான அரசகுலி மயானம் அருகே எரிவாயு தகன மேடை அமைக்கப்பட உள்ளது. ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

    இந்த தகன மேடைக்கான பூமி பூஜை மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. ஒரு வருடத்துக்குள் பணியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பூமி பூஜையில் நகராட்சி ஆணையாளர் கண்ணன், பொறியாளர் பாண்டீஸ்வரி, நகரமைப்பு ஆய்வாளர் திலகவதி, நகர மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம் , ஒன்றியசெயலாளர் அண்ணாதுரை, நகர்செயலாளர் பொன்னுசாமி , கவுன்சிலர்கள் மாரிக்கண்ணன், சண்முகப்பிரியா, புருஷோத்தமன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நகர்ப்புறத்தில் பெரும்பாலான உடல்கள் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகின்றன.
    • நடமாடும் எரிவாயு தகனமேடை வாகனத்தின் சாவிகளை ஊராட்சி தலைவர்களிடம் ஒப்படைத்தனர்.

    திருப்பூர்:

    இறந்தவர்களை அடக்கம் செய்ய மயானத்தை தேடி சென்ற நிலை மாறிவிட்டது. நகர்ப்புறத்தில் பெரும்பாலான உடல்கள் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் கிராமப்புற மக்கள் பயன்படுத்த வசதியாக, நடமாடும் எரிவாயு தகனமேடை வாகனம், மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நமக்கு நாமே திட்டத்தில் தனியார் நிறுவனம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன், மங்கலம், சின்ன மருதூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும், 32.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடமாடும் எரிவாயு தகன மேடை வாகனம் பயன்பாட்டுக்கு வருகிறது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் நடமாடும் எரிவாயு தகனமேடை வாகனத்தின் சாவிகளை ஊராட்சி தலைவர்களிடம் ஒப்படைத்தனர்.

    ×